கல்முனை பிரதேச செயலக கணக்காளராக யூ.எல் ஜவாஹீர் நியமனம்.

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக இன்று (2020.03.02) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய இவர் இன்று (02) முதல் கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றவுள்ளர்.

இலங்கை கணக்காளர் சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த யூ.எல் ஜாவாஹீர் காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி கணக்காளர் வை.ஹபிபுல்லா, கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர்,  உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம் கலீல், கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதிருத்தீன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா, நலன்னோம்பல்.அமைப்பின் செயலாளர் எம்.எம்.ஹசன் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

News & Events

27
ஜூலை2026

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri...

12
மே2026

அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதிய மாவட்ட செயலாளர் உத்தியோகபூர்வ விஜயம்

அம்பாரை மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் உத்தியோகபூர்வ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top