எமது நோக்கு

பிரதேசத்தினை அபிவருத்தி செய்து மக்களின் வாழ்க்​கைத்  தரத்தையும், நலனையும் விருத்தி செய்தல்

 
 
 
   

எமது பணிகள்

மக்களின் சேவையை உறுதி செய்து மனிதாபிமான சேவை மற்றும் ஏனைய சேவைகளை வழங்கி பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி பிரதேச செயலகத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களின் நிகழ்ச்சி திட்டங்களின் சேவைகளை ஒருங்கிணைத்தல்

கல்முனை பிரதேச செயலகத்தின் அறிமுகம்

கல்முளை பிரதேசம் கல்முனை நகரில் இருந்து 120 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது 29 கிராமஉத்தியோகத்தர் பிரிவையும் 4 கிரமங்களையும் கொண்டுள்ளது. இது கிழக்கு பக்கம் கடலையும் மேற்குபக்கம் நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவையும் வடக்கே களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவையும் தெற்கே சாய்ந்த மருது பிரதேச செயலக பிரிவையும் கொண்டுள்ளது. கல்முளை பிரதேசம் செயலக பிரிவு 19.65 சதுர கி. மீற்றர் நிலபரப்பை கொண்டுள்ளது. 2017 ஆம் ஆணடின் தொகை மதிப்பீட்டின் படி 51413 சனத்தொகையும் 14044 குடும்பங்களையும் கொண்டுள்ளது. மொத்த சனத்தொகையில் 49.16% மான ஆண்களையும் 50.84% மான பெண்களையும் கொண்டுள்ளது. இங்கு முஸ்லிம் தமிழ் கிஸ்தவ மற்றும் சிங்கள இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இதில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அதற்கு அடுத்த நிலையில் முறையே தமிழர்கள் கிறிஸதவர்கள் சிங்களவர்கள் காணப்படுகின்றார்கள்.

கல்முனை பிரதேச செயலகத்தின் வரலாறு

கல்முனை பிரதேசத்தில் ஏற்பட்ட சனத்தொகை அதிகரிப்பு மற்றும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தனியான பிரதேச செயலக பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்பிரகாரம் 1993.10.10 ஆம் திகதி சகல அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக கல்முனை பிரதேச செயலகம் திறந்துவைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலகம் நல்ல இயற்கை வளம் நிறைந்த ஒரு பிரதேசமாகும். இப்பிரதெசத்தின் உள்நாட்டு பொருளாதார அபிவிருத்திக்கு விவசாயம், மீன்பிடி, கைத்தறி, குடிசைக்கைத்தொழில், வியாபாரம் என்பன குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கிவருகின்றது. இப்பிரதேசம் ஆரம்பத்தில் சிறிய வர்த்தகத்துடன் ஆரம்பித்து படிப்படியாக விரிவாக்கமடைந்து தற்பொழுது பாரிய முதலீட்டு வியாபாரமாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் கரையோர நீளம் ஏறக்குயை10 கி.மீ ஆகும். இது கரையோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடிக்கு மிகவும் உகந்ததாக காணப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் இப்பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் கட்டுமரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. பின்னர் இப்பிரதேச மீனவர்கள் படிப்படியாக நவீன மீனபிடி முறைக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். மீன்பிடி துறையை எடுத்துக்கொண்டால் 2017 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி 921 குடும்பங்கள் மீன்பிடி நடவடிகடகைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றார்கள். இதில் 729 குடும்பங்கள் நேரடியாக மீன்பிடி நடவடிக்​கைகளில் ஈடுபடுகின்ற குடும்பங்களாக இருக்கின்றார்கள். இதில் முறையே 691 குடும்பங்கள’ கடல் மீன்பிடி நடவடிக்கைகளிலும் 38 குடும்பங்கள் நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இப்பிரதேசத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நெற்செய்கை, மரகக்கறி பயிர்ச்செய்கை, பழப்பயிர்ச் செய்கை, தென்னை பயிர்ச் செய்கை, மாடுவளர்ப்பு, ஆடுவளர்ப்பு மற்றும் கோழிவளர்ப்பு என்பன விவசாயத்தின் பகுதிகளாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் 58717 ஏக்கர் காணியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிர​தேச செயலகத்தில் பணியாற்றிய பிரதேச செயலாளர்களின் விபரம்

பெயர் இருந்து வரை
எம்.ஐ. அமீர் 1993 1997
ஏ.எல். பளீல் 1998 1999
ஏ.எச்.எம். அன்சார் 2001 2006
எம்.எம். நௌபல் 2007 2013
ஐ.எம். ஹனிபா 2013 2014.06.07
ஏ. மங்கள விக்ரமாராச்சி 2014.06.07 2015.05.18
எம்.எச்.எம். கனி 2015.05.18 2018.10.22
எம்.எம். நஸீர் 2008.10.22 2021.03.01
ஜே.லியாகத் அலி 2021.03.01 இன்று வரை

News & Events

27
ஜூலை2026

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri...

12
மே2026

அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதிய மாவட்ட செயலாளர் உத்தியோகபூர்வ விஜயம்

அம்பாரை மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் உத்தியோகபூர்வ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top