கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி நியமனம் (01/03/2021)

கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி இன்று(01) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளர்.என்பதோடு இவருக்கான நியமனம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டது.

இலங்கை நிர்வாக சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த ஜெ.லியாக்கத் அலி காரைதீவு,சம்மாந்துறை பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், கல்முனை மாநகர சபையில் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம் கலீல், கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதிருத்தீன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

153005243 870160206885433 9182122396456530864 n 

 153394040 870160236885430 7283509818911758615 n

151236984 870160320218755 2049052279622566227 n 

 151144107 870160366885417 556241024255086763 n

153023162 870160423552078 1583308664194176095 n   

150138679 870160486885405 259376750078892730 n

149745219 870160526885401 8131423444176263294 n

 

 

News & Events

27
ஜூலை2026

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri...

12
மே2026

அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதிய மாவட்ட செயலாளர் உத்தியோகபூர்வ விஜயம்

அம்பாரை மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் உத்தியோகபூர்வ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top