கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பேரனர்த்த நிதி பங்களிப்பு – கௌரவிப்பு விழா அறிக்கை
நிகழ்வின் பின்னணி
திக்வா புயல் வெள்ளம் பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் பொருட்டு, எமது பிரதேச செயலகத்தின் பல பிரிவுகளிலுள்ள உத்தியோகத்தர்கள் தமது நிதி பங்களிப்பை வழங்கினர். அந்த நிதியின் மூலம் பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பொலனறுவை தம்பாளை பிரதேசத்தின் அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற விதம்
2026 ஜனவரி 29 ஆம் திகதி, எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நேரடியாக அல் ஹிலால் மத்திய கல்லூரிக்கு சென்று, மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை கையளித்தனர்.
நன்றியுரை
இந்த உதவியை கையேற்ற பாடசாலை அதிபர், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர், பங்களிப்பு செய்த பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்காக பிரார்த்தித்து, தமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தனர். மேலும், இந்த நன்றியை அதிகாரப்பூர்வமாக எத்தி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
நிகழ்வின் புகைப்படங்கள்

















