அம்பாரை மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் உத்தியோகபூர்வ விஜயம்
அம்பாரை மாவட்ட செயலகத்தில் புதிதாக கடமையேற்ற மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்கள் வியாழக்கிழமை (23.04.2026) எமது அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.அவரது வருகையின்போது மாணவர்களின் பேண்ட் வாத்தியங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
டிஜிட்டல் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் புதிய இணைய சேவை தொடக்கம்
மக்களுக்கு விரைவான, வினைத்திறனான மற்றும் தரமான சேவையினை வழங்கும் நோக்கில், பிரதேச செயலக முன்சேவை அரங்கில் மேம்படுத்தப்பட்ட இணைய வழி சேவை அன்றைய தினம் மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்ஸார் தலைமையில், மாவட்ட செயலாளர் பொன்னாடை போர்த்தி மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் பங்கேற்பு
பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அதோடு, எமது அலுவலகத்தின் முன்னரங்கு சேவையின் டிஜிட்டல் இணையத்தளத்தையும் மாவட்ட செயலாளர் பார்வையிட்டு தனது கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
ஆன்லைன் சான்றிதழ் சேவை
பதிவாளர் பிரிவில் online முறையில் சான்றிதழ்களை பெறும் வசதியையும் அவர் வரவேற்றார்.
மேலும், எமது அனைத்து அலுவலக பிரிவுகளையும் பார்வையிட்டு, அலுவலகத்தில் உள்ள குறைகளை ஆராய்ந்து, எதிர்காலத்தில் சிறந்த திட்டமிடலின் ஊடாக மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவார் எனவும் தெரிவித்தார்.





























